• Jul 25 2025

அம்மா இறந்தும் பணத்தை பறிக்க 3 நாள் ஹாஸ்பிட்டலிலேயே வைச்சிருந்தாங்க- நடிகர் பரத் ஜெயந்த் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகர் தான்  நடிகர் பரத் ஜெயந்த்.இவர் விஜய்யின் ப்ரண்ட்ஸ், விஜயகாந்த் நடித்த வானத்தை போல போன்று சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார். படங்களைத் தவிர  தாண்டி வாரிசு, பூம் பூம் ஷக்கலக்க போன்ற சில சீரியல்களிலும் நடித்திலுக்கின்றார்.

சமீபகாலமாக சினிமா பக்கமே இவரை காணவில்லை, என்ன செய்கிறார் என்பது கூட தெரியாமல் இருந்தது.ஆனால் தற்போது பரத் ஜெயந்த் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதாவது இவர் பெசண்ட் நகரில் The Tickle Truck எனும் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவர் இந்தக் கடையை கடந்த 2018ம் ஆண்டு தான் ஆரம்பித்துள்ளார்.


இந்த கடையில் வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். என் தந்தை நான் சிறியதாக இருக்கும் போதே என் தாயை விட்டுவிட்டு போய்விட்டார். எனவே என் அம்மா தான் என்னை வளர்த்தார், அவர் மிகவும் தைரியமானவர்.ஆனால் இப்போது என் அம்மா-அப்பா இருவருமே இல்லை. அம்மா இல்லாத வெறுமை ஒரு மாதிரியாக இருக்கும், நிறைய வருத்தப்பட்டுள்ளேன்.

கடைசியாக அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அம்புலன்ஸில் ஏறும்போது தனக்கு பயமாக இருக்கிறது என்றார், அத்துடன் சுயநினைவு இல்லாமல் போய்விட்டார்.என் அம்மா இறந்தும் பணத்தை பறிக்க 3 நாட்களாக அவருக்கு சிகிச்சை கொடுத்தார்கள் என்று சோகமான சம்பவம் குறித்து எமோஷ்னலாக கூறியுள்ளார்.


மேலும் இவர் வெகு சீக்கிரத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் தமது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement