• Jul 26 2025

அவள் அமுதவாணனுக்காகத் தான் ஆடுவாள் ,இதெல்லாம் வொர்த்தே இல்லை- ஜனனியை மோசமாக திட்டும் அசீம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்காக  பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா இருக்கின்றனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் உள்ளனர்.

இதில் பழங்குடி அணியினர் அனைவரிடத்திலும் தனது ஆலோசனைகளை யாருமே ஃபாலோ பண்ணவில்லை என அசீம் கொதிக்கிறார். அதற்கு விக்ரமனும் கதிரும், “அசீம்.. நீங்க சொல்றதை யாரும் கேக்காமல் இல்லை? ஆனால் அனைவரின் முடிவையும் சேர்த்துதான் முடிவெடுக்க முடியும்” என கூறினர்.


ஷிவினோ, “நான் டீம் டிஸ்கஷனுக்கு ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உங்கள் தனிப்பட்ட முடிவை மட்டும் ஏற்க முடியாது” என கூறுகிறார். இதைத் தொடர்ந்து டீம் டிஸ்கஷனுக்காக ஜனனியை அழைத்தனர். அதற்குள் கோபப்பட்ட அசீம், “நீங்க பேசுங்க.. நான் பேசல” என கூற, இவ்வளவு நேரம் கத்திவிட்டு, இப்போது பேச விருப்பம் இல்லை என சொன்னால் என்ன அர்த்தம் என விக்ரமனும், ஷிவினும் கேட்க தொடங்கினர். இறுதியில் அசீம் யாரையோ லூசு என சொல்லிவிட, அசீம் யாரைத்தான் நேரடியாக சொல்கிறார் என அனைவர் முன்னிலையிலும் சொல்லுங்கள் என அனைவருமே கேட்க தொடங்கிவிட்டனர்.

பின்னர் ஷிவின், “ஜனனியை உள்ளே அனுப்பினால், அவள் உள்ளே போயிட்டு அமுதவாணனுக்காகவும் தனலட்சுமிக்காகவும் கேம் ஆடுவாள். அவளுக்கு தூங்குவதுதான் முக்கியம். எனவே அவளை 2,3 நாட்களுக்கு அனுப்ப வேண்டாம். கடைசியாக அனுப்புவோம்.” என அசீம் சொன்னதாக சொல்கிறார். இதை கேட்ட ஜனனி உடைந்து அழுதே விட்டார். இதை கேட்ட விக்ரமன், “எதுக்காக அந்த பொண்ணு இல்லாதப்ப அவள பத்தி பேசணும்” என கொந்தளித்தார்.


அப்போது அழத் தொடங்கிய ஜனனி,  “அப்படியானால் நான் ஏன் இந்த அணிக்காக ஆடியிருக்க போகிறேன்” என அசீமின் குற்றச்சாட்டுக்கு எதிராக மிகவும் உடைந்து போகிறார். அந்த சமயத்தில், “இதெல்லாம் அழுறதுக்கு வொர்த்தே இல்லை... அழாத என மைனாவும் தனாவும் ஜனனியை சமாதானப்படுத்த, குயின்ஸியும், “மத்தவங்கள கஷ்டப்படுத்துறது எப்படினு யோசிக்குறவங்க கிட்டலாம் நீ இதை பண்ணாத.. ஸ்ட்ராங்கா இரு” என சமாதானப்படுத்த, விக்ரமோ, “அப்படியே ஜனனி அப்படி விளையாட தெரியாமல் விளையாடுவதாக அசீம் நினைத்தால், தோற்பது ஜனனிதானே இது தனி போட்டியாளரின் கேம்.. அவருக்கு என்ன?” என சொல்லிவிட்டார். கடைசியில் அசீமோ, “யார் என்ன சொன்னால் என்ன? என் கேமை என் இஷ்டப்படிதான் நான் ஆடுவேன்” என கூற, “நீங்கள் ஆடுங்க அசீம்” என ஷிவினும் கூறிவிட்டார்.இதனால் இவர்களுக்கிடையில் பெரும் வாக்குவாதம் இடம் பெற்றுக் கொண்டே இருப்பதையும் காணலாம்.


Advertisement

Advertisement