• Jul 25 2025

சன் டிவியில் கதாநாயகியாக களமிறங்கும் செம்பருத்தி ஷபானா- அதுவும் எந்த சீரியலில் தெரியுமா?

stella / 3 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் செம்பருத்தி. காதல் கதையை மையப்படுத்தி உருவாகிய இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

மேலும் இந்த சீரியலில் ஷபானா கதாநாயகியாகவும் கார்த்திக் என்பவர் ஆதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இப்பவர் கார்த்திக் வெளியேறியதை அடுத்து அக்னி என்பவர் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இதனால் ஒரு கால கட்டத்தில் உச்சந் தொட்ட சீரியல் எனலாம்.

அத்தோடு இந்த சீரியலில் செய்யப்பட்ட மாற்றங்களினால் ரி ஆர் பியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டள்ளது. இதனால் இந்த சீரியலை எப்போது முடிப்பீர்கள் என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் இதன் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது வெளியாகிய தகவலின் படி இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஷபானா சன்டிவியில் முக்கிய சீரியலில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். ஆனால் அந்த சீரியல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement