• Jul 25 2025

அவங்களே அம்மா தானே ...40 வயது நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா ..ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த சமந்தா இப்போது பாலிவுட்டையும் அசரடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் வெப் சீரிஸ் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது.

அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸான இந்த வெப் சீரிஸ்ஸை ராஜ் & டிகே என்ற இரட்டையர்கள் இயக்கியிருந்தனர்.தி பேமிலி வெப் சீரிஸில் சமந்தாவின் கேரக்டர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சில காட்சிகளில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார் சமந்தா. அமேசான் ப்ரைம் தயாரிக்கும் இந்த சீரிஸ், ஹாலிவுட்டில் ரூஸோ பிரதர்ஸ் இயக்கியிருந்தனர். அதன் இந்திய வெர்ஷனில் தான் சமந்தா நடித்து வருகிறார்.

அவருடன் வருண் தவான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் சமந்தாவின் கேரக்டர் செம்ம வெயிட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம், அவர் பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக நடித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 1980, 90களில் நடைபெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் சமந்தா, வருண் தவான் நடிக்கவுள்ளார்களாம்.அதன்படி, பிரியங்கா சோப்ரா சமந்தாவின் மகளாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து சிட்டாடல் படக்குழு தரப்பில் இருந்து எவ்வித அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், இது உறுதியான தகவல்கள் என்றே தெரிகிறது. 

அவரே பாலிவுட்டின் அம்மா நடிகை ரேஞ்சுக்கு போய்விட்ட நிலையில், பிரியங்கா சோப்ராவுக்கே சமந்த அம்மாவாக நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.




Advertisement

Advertisement