• Jul 26 2025

சிவனாக மாறிய அக்ஷய் குமார் 'ஓ மை காட் 2'.. ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அக்ஷய் குமார் நடிப்பில் தற்போது 'ஓ மை காட் 2' என்ற படம் உருவாகி வருகின்றது. இந்தியில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார். மேலும் இவருடன் இணைந்து பங்கஜ் திரிபதி, யாமி கௌதம் மற்றும் அருண் கோவில் எனப் பல பிரபலங்களும் நடிக்கின்றனர்.


அமித் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் 2021 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தன. இப்படத்தில் அக்ஷய் குமார் சிவனாக நடிக்கவுள்ளார் என்பது வெளியான போஸ்டரில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது


இந்நிலையில் தற்போது இப்படத்தினுடைய ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் 'ஓ மை காட் 2' படத்தின் ஓடிடி உரிமத்தை வூட் மற்றும் ஜியோ சினிமாஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement