• Jul 26 2025

கனடாவில் நடைபெறும் ராகா ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய அழகான மயக்கும் குரலால் அனைவரையும் கவர்ந்தவர் ஷிவாங்கி கிருஷ்ணகுமார்.இதில் இவர் செய்யும் சேட்டைகளால் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

தன்னுடைய கோமாளித்தனங்களால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் நடிகர் அஸ்வினுடன் இணைந்து செய்த குறும்புகள் வேற லெவல் ரகம்.ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் படங்களில் அதிகமான பாடல்களை பாடி வருகிறார். பல ஹிட் நம்பர்களையும் கொடுத்து வருகிறார்.

தனிப்பட்ட முறையில் ஆல்பம் பாடல்களையும் பாடி அதில் நடித்தும் வருகிறார். இதன்மூலம் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து காசே தான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தொடர்ந்து குக் வித் கோமாளியின் 3வது சீசனிலும் பங்குபற்றி இருந்தார்.

இதனிடையே இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்றுவரும் ஷிவாங்கி தற்போது கனடாவில் நடைபெற்றுவரும் ராகா ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டொரெண்டோ சென்றுள்ளார். அங்கு இசை நிகழ்ச்சிக்கு இடையில் கிடைத்த கேப்பில் நயாகராவையும் கண்டு களித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர் காதல் நயாகரா என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement