• Jul 24 2025

ஷிவாங்கியின் தீவானா பாடல் ஒரு நிமிடத்தில் செய்த சாதனை- ரசிகர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்னும் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஷிவாங்கி. தனது அழகிய குரல்வளத்தினால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

இதனை அடுத்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே தனக்கென ஒரு ரச்கர் பட்டாளத்தை உருவாக்கியதோடு படவாய்ப்பினைப் பெற்று நடித்தும் வருகின்றார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பாக #1MinMusic’ என்னும் ஷோ நடைபெறுவதுண்டு 

இதில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுவருகிறார்கள். இதன் ஒரு அங்கமாக இன்ஸ்டாகிராம், தமிழுக்காக Silver Tree இணைந்து 25 கலைஞர்களுடன் பணியாற்றுகிறது.


அந்த வரிசையில்  சிவாங்கியினுடைய  'தீவானா'  என்ற #1MinMusic சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.இயக்குநர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலை அனி வீ இசையமைத்துள்ளார். சிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வைராலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement