• Jul 26 2025

மைக்கைத் தொலைத்த ஷிவின்... கண்டித்த ரொபேர்ட் மாஸ்டர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது என்றுமே இல்லாத அளவிற்கு சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமே அங்குள்ள போட்டியாளர்கள் தான். ஏனெனில் இவர்கள் எந்தளவிற்கு பாசமாக இருக்கின்றார்களோ, அதைவிட டபுள் மடங்கு மோசமாகவும் இருக்கின்றார்கள்.

அதாவது எப்போதுமே கோபம், சண்டை, சச்சரவு என பிக்பாஸ் வீடே இரண்டு பட்டிருக்கும். அந்தவகையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ராஜா ராணி டாஸ்க் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தற்போது ஷிவினின் மைக் காணாமல் போய் இருக்கின்றது. அதனை ஷிவின் கேமரா முன் சென்று பிக்பாஸிடம் முறை விடுகின்றார்.


அதற்கு பதிலளிக்கும் வகையில் பிக்பாஸ் "இந்த வீட்டிற்குள் நீங்கள் மட்டுமல்ல மைக்கும் மக்கள் விருப்பப்பட்டால் தான் வெளிய போக முடியும். அப்படி இருக்கும் போது எங்கே போய் இருக்கும்" எனக் கேட்கின்றார். அதற்கு மைனா "போய் தேடு எவனாவது ஒழித்து வைத்திருப்பான்" எனக் கூறுகின்றார்.

அதற்கு ஷிவின் மறுபடியும் "மைக்கைத் திருடி விட்டார்கள்" என்று சொல்கின்றீர்களா" என பிக்பாஸிடம் கேட்கின்றார். இதை அவதானித்த வண்ணம் இருந்த ரொபேர்ட் மாஸ்டர் உடனே "அதுதானே அவர் சொல்லுறாரு, அஜாக்கிரதையாய் இருக்கிறாய் என்று, குளிச்சிட்டு வந்த உடனே போட வேண்டியது தானே கழுத்தில்" எனக் கூறி ஷிவினைக் கண்டிக்கின்றார். இதனைத் தொடர்ந்து ஷிவின் மைக் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.


Advertisement

Advertisement