• Jul 25 2025

ஏடிகே மீது பழி சுமத்திய ஷிவின்- முதன்முறையாக கோபப்பட்டு கிளம்பிய ராபேர்ட் மாஸ்டர்- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் வீட்டில் ராணி ராஜா என்னும் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.இதில் ரகசிய டாஸ்க் ஒன்றினை ரச்சிதா மற்றும் அசீமுக்கு இடையில் வழங்கப்படுகின்றது. இவர்கள் தமது டாஸ்கிற்கு உதவி செய்ய யாரைத் தேர்வு செய்யலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பின்னர் இதற்கு கதிரவன் தான் சரியாக இருப்பார் என்று தேர்வு செய்து உள்ளனர். மேலும் ராஜாவின் சொத்துக்களைக் களவு போகாமல் பார்க்க ஏடிகே விடிய விடிய காவல் காக்கின்றார்.இருப்பினும் காலையில் அவர் மெதுவாக கண் அசந்த நேரத்தில் கதிரவன் ஒரு பெட்டியை எடுத்து குகைக்குள் போட்டு விடுகின்றார்.


இதனை கண்ட ஏடிகே மன்னன் மற்றும் ராணியை அணுகி இது குறித்து பேசும் போது ஷிவின் ஏடிகே உதவி செய்ததால் தான் இது நடந்திருக்கு என்று கூறுகின்றார். இதனால் கடுப்பான ஏடிகே விடிய விடிய முழிச்சிருந்த என்னை அப்படி சொல்லிட்டாங்களே எனக்கு யாரும் சர்ப்போட் பண்ணலயே என ராமிடம் போய் சொல்லித் திட்டுகின்றார்.

இதன் பின்னர் சட்டசபை கூடி கதிரவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பேசிட்டு இருக்கும் போது ஷிவின் சம்மந்தமே இல்லாமல் பொருட்களை எடுத்து ஒழிக்கின்றார். பின்னர் கதிரவனுக்கு தண்டனை கொடுத்தும் இவர் கையில் போட்டிருந்த விலங்கைக் கழட்டி விட்டிட்டு சில பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடும் போது ஹவுஸ்மேடஸ் அதனைப் பிடித்து விட்டனர்.

இது ஒரு புறம் இருக்கு ராபேட் மாஸ்டர் தன்னை யாரும் மதிக்கல என்று கோபப்பட பின்னர் ராணி ரச்சிதா சமாதானப்படுத்துகின்றார்.அத்தோடு விக்ரமன் ஜனனி தன்னை மதிக்கல என்ற கருத்தை முன்வைக்கின்றார். இதனால் கடுப்பான ஜனனி இந்த இடத்தை விட்டு எழும்பிச் சென்று விடுகின்றார்.


இதன் பின்னர் ஏடிகே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அசீம் எதுக்கு என்னை பற்றி முதுகிற்குப் பின்னாலே பேசுகின்றாய் நேராகப் பேச தைரியமில்லையா எனத் திட்டுகின்றார். இதனால் இருவருக்கும் இடையில் சிறிய வாக்குவாதம் ஏற்படுகின்றது. பின்னர் ஏடிகே விக்ரமன் மற்றும் ராமிடம் சென்று இது குறித்து புலம்புகின்றார்.

அத்தோடு ஷிவின் தான் திருடி என்பதை அறிய ராஜா ஒரு ஐடியாவை தனலக்ஷ்மிக்கு கூறுகின்றார். அதன்படி ஒரு பெட்டிக்குள் அமர்ந்திருந்து தனலக்ஷ்மி உண்மையைக் கண்டு பிடித்து ராஜாவிடம் கூற அவருடைய மேக்கப்பை கலைத்து விட்டு முகத்திற்கு எண்ணெய் பூசுமாறு தண்டனை வழங்கப்படுகின்றது.இதனை அடுத்து ராஜா ராணியின் நடனத்துடன் இந்த 39ம் நாள் எப்பிஷோட் முடிவடைகின்றது 

Advertisement

Advertisement