• Jul 26 2025

மருமகளோட ஒரு காலத்தில ஊர் சுற்றியிருக்கிறேன் இப்போ அதெல்லாம் இல்ல- விஜய்யின் மனைவி பற்றி பேசிய ஷோபா சந்திரசேகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர், தற்போது பிரபல சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்தார்.  இதில், தனது கணவர் S.A. சந்திரசேகர் மற்றும் மகன் விஜய் குறித்தும், தனது குடும்பத்தினர் குறித்தும் என பல சுவாரஸ்ய பதில்களை ஷோபா சந்திரசேகர் பகிர்ந்து கொண்டார். மேலும் தனது மருமகளும், விஜய்யின் மனைவியுமான சங்கீதா குறித்தும் நிறைய விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

விஜய்யின் மனைவியும் தன்னுடைய மருமகளுமான சங்கீதாவுடனான உறவு குறித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருந்தார். "உங்களுக்கும் உங்களுடைய மருமகளுக்குமான ரிலேஷன்ஷிப் எப்படி?. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து படத்துக்கு போறது, ஷாப்பிங் போறது எல்லாம் பண்ணுவீங்களா?" என கேட்கிறார்.


இதற்கு பதில் சொல்லும் ஷோபா, "எல்லாம் பண்ணோம், பண்ணிட்டு இருந்தோம் ஒரு காலத்துல. இப்ப பசங்க எல்லாம் வளர்ந்து அதோட Routine எல்லாம் மாறுனதுக்கப்புறம்  இந்த மாதிரி போறது எல்லாம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு. இப்ப எல்லாம் வெளியே போனால் சீக்கிரமா கண்டுபிடிச்சிடுறாங்க. முன்னாடி எல்லாம் பாம்பே எல்லாம் போய் நிறைய ஷாப்பிங் பண்ணி இருக்கோம்.


அதே மாதிரி படத்துக்கு கீதா முதல்ல பாத்துட்டு வருவா. அதுக்கப்புறம் மேட்னி ஷோக்கு நான் போவேன். இதுதான் விஜயோட ஒவ்வொரு மூவிக்கும் நாங்க பண்றது. ஒரு சேஃப்ட்டிக்காக தான் அப்படி பண்றது. இப்ப எல்லாம் போட்டோஸ் எடுத்திடுறாங்க. அது கொஞ்சம் கஷ்டமா இருக்கு நம்மளுக்கு" என தெரிவித்தார்.


Advertisement

Advertisement