• Aug 25 2025

உண்மைகளை மறைத்து மகாலட்சுமியை திருமணம் செய்த ரவீந்தர்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படத் தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார்.


இதனையடுத்து சந்தோஷமாக வாழ்க்கையை நடாத்தி வந்த இவர்களது வாழ்வில் புயல் வீசியது போன்று ஒரு சம்பவம் நிகழந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். 


அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ரவீந்தர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில் போலீஸ் விசாரணையின் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது ரவீந்தர் இதுபோல் பல பிரபலங்களை அவர் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது இது குறித்த சம்பவங்களை மறைத்து தான் மகாலட்சுமியை ரவீந்தர் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி தற்போது கடும் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement