• Jul 25 2025

அந்த டாட்டூவா நான் இருக்க கூடாதா?- அந்த இடத்தில் பச்சை குத்திய புகைப்படத்தை பதிவிட்ட ரச்சிதா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ரச்சிதா இந்த சீரியலில் தன்னோடு கதாநாயகனாக நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திடீர் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 

முதல் சீரியலில் தினேஷை ஒருதலையாக காதலித்த ரச்சிதாவை விட்டு தினேஷ் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வார். ஆனால் நிஜத்தில் ரச்சிதா அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பேட்டிகளிலும் பேசி வந்தனர். அதை தொடர்ந்து ரச்சிதாவிற்கு சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அடுத்தடுத்த பல வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.


இந்த நிலையில் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரித்து வாழ்ந்து வருகின்றனர்.அண்மையில் தினேஷ் தனக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாகவும் ரச்சிதா சர்ச்சைக்குரிய புகாரை அளித்திருந்தார்.

இதனை அடுத்து தினேஷ் ரச்சிதாவுக்கு விவாகரத்து வேண்டும் என்பதற்காகவே தன்னைப் தவறான புரளியைக் கிளப்பியுள்ளார் என்று விளக்கம் கொடுத்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரச்சிதா தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் தற்பொழுது நெஞ்சில் பருந்தை பச்சை குத்தியிருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருவதையும் காணலாம்.




Advertisement

Advertisement