• Jul 25 2025

என்ன விலை அழகே உந்தன் அழகுகிற்கில்லை ஈடே- மகளுடன் வித்தியாசமான போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா

stella / 2 years ago

Advertisement

Listen News!

திருமணத்திற்கு பின்பும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை தான் ஸ்ரேயா, இவர் தனக்கு குழந்தை பிறந்ததை ஆறு மாதத்திற்குப் பின்பு தான்  அறிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.


திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்டாலும், தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. தமிழில் இவர் நடித்த 'சண்டைக்காரி' படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படம் மற்றும் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் தற்பொழுது தனது மகளுடன் கியூட்டான போட்டோஷுட் நடத்தியுள்ளார். இது மிகவும் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement