• Jul 23 2025

காதலனை விட்டு தனியாக சுற்றுலா சென்ற ஸ்ருதிஹாசன்- அடடே இது தான் காரணமா?- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ளார். தமிழில் முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் 7ம் அறிவு என்ற படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த இவர் பாலிவுட்டிலும் தற்போது படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.


இதனிடையே கடந்த பொங்கலையொட்டி சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ஹ ரெட்டி என இரண்டு படங்கள் ஸ்ருதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த இரு படங்களுமே இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.


 தொடர்ந்து தெலுங்கிலேயே கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபாசுடன் ஸ்ருதி ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதிகமான சுற்றுப்பயணங்களை விரும்புபவராக உள்ள ஸ்ருதிஹாசன் தற்போது கொடைக்கானலில் சுற்றுலா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனியாகவே இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இடையில் மயில் கூட்டங்களுக்க நடுவில் குயிலாய் பாடியபடி அவர் தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார். மிகவும் அழகான தருணங்களை கொடுக்கும் கோடைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement