• Jul 25 2025

குக்வித்கோமாளி ஷோவுக்கு போட்டியாக புதிய ஷோவை ஆரம்பித்துள்ள ஷு தமிழ்- டைட்டிலையும் காப்பியடித்து விட்டுட்டாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக இருப்பது தான் குக்வித் கோமாளி. சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியான இந்த ஷோவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது.

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தபடியே, குக் வித் கோமாளி சீசன் 4ன் டைட்டில் வின்னராக மைம் கோபி கோப்பையை தட்டி சென்றுள்ளார்.மேலும் இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி பிடித்துள்ளார். விசித்திரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் தற்போது  ஷு தமிழ் சேனல் ஒரு புது ரியாலிட்டி ஷோவை அறிவித்து இருக்கிறது. யார்ரா கோமாளி என அந்த ஷோவுக்கு பெயர் வைத்து இருக்கின்றனர்.

சில புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.ப்ரோமோ வீடியோவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஷோ எப்படிப்பட்ட ஷோவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement