• Jul 25 2025

நடிகர் ஷர்வானந்த் நிச்சயதார்த்தத்திற்கு ஜோடியாகச் சென்ற சித்தார்த்த மற்றும் அதிதி- அப்போ காதலிப்பது உண்மை தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் அதிதி.அதே போல மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சித்தார்த், அவரது இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் மகாசமுத்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்துவருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவிவருகிறது. 


சில மாதங்களுக்கு முன் அதிதியின் பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்ட சித்தார்த், அதில் என் இதயத்தின் இளவரசியே என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் ஷர்வானந்த்தின் நிச்சயதார்த்தத்துக்கு சித்தார்த்தும் அதிதியும் ஜோடியாக கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


 அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.மகாசமுத்திரம் படத்தில் ஷர்வானந்த், சித்தார்த், அதிதி ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தனர்.சித்தார்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடித்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement