• Jul 25 2025

முக்கிய நகரங்களில் களை கட்டப்போகும் சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம்-வெளியானது சூப்பர் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ள பாலிவுட் ஜோடிகளில் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா முக்கியமானவர்கள்.இவ்வாறுஇருக்கையில்  ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு இரண்டு முக்கியமான இடங்களை தேர்வு செய்திருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல், மல்ஹோத்ரா மற்றும் அத்வானி குடும்பத்தினர், திருமண தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட தயாராகி வருகிறார்களாம்.

அத்தோடு சித்-கியாராவின் திருமணத்திற்கான அரங்குகளில் ஒன்று சண்டிகரில் உள்ள ஓபராய் சுக்விலாஸ் என்று இந்தியா டுடே தெரிவிக்கிறது. மேலும் இந்த இடம் டெல்லிக்கு அருகில் இருப்பதால், அங்கு வசிக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவின் குடும்பத்திற்கு வசதியாக இருக்கும். அதைத் தொடர்ந்து, மும்பையில் திரைத்துறை விருந்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆடம்பரமான வரவேற்பு நடத்தப்படும்.

சித்தார்த் மற்றும் கியாராவின் குடும்பங்கள் தற்போது இறுதி விருந்தினர் பட்டியலை தயாரித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு சில சக நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன், திரையுலக நண்பர்களும் திருமண கொண்டாட்டங்களில் இடம் பெறுவார்கள்.

கரண் ஜோஹர் மற்றும் அஸ்வினி யார்டி பெயர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகின்றது. அதோடு, வருண் தவான், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி பக்னானி ஆகியோரும் சித்-கியாரா திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனினும் தற்போது சித்தார்த் மற்றும் கியாரா இருவரும் தத்தம் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளனர். கியாரா ராம் சரண் உடன் RC15 படப்பிடிப்பில் உள்ளார். அதே நேரத்தில் சித்தார்த், ரோஹித் ஷெட்டியின் இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ், திஷா பதானியுடன் யோதா ஆகியப் படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

Advertisement

Advertisement