• Jul 23 2025

பிரபல நடிகையுடன் தியேட்டருக்கு வந்த சித்தார்த்- நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்த ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடிகராக இருந்து வருபவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் ஆங்கிலத்தில் ஒரு படம் நடித்துள்ளார்.

43 வயதாகும் இவர் கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் இருந்துள்ளார். கடைசியாக தமிழில் அருவம் படத்தில் நடித்திருந்த சித்தார்த் இப்போது கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.


படங்களில் நடிப்பதை தாண்டி நாட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து தனது கருத்தை தைரியமாக பதிவு செய்யக்கூடியவர், அதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்திருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக சித்தா என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இப்படத்தின் ப்ரமோஷனுக்காக  பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் கூட அவர் நடித்து ப்ரமோஷன் செய்திருக்கிறார். இது தவிர சென்னையில் பிரபலமான EGA தியேட்டருக்கு நேற்று வந்திருக்கிறார் சித்தார்த். சித்தா படம் முடிந்து end credits ஓடிக்கொண்டிருக்கும்போது சித்தார்த் தியேட்டருக்குள் செல்ல ரசிகர்கள் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்தனர்.


 மேலும் சித்தார்த் உடன் நடிகை அதிதி ராவும் வந்திருந்தார். அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement