• Jul 25 2025

சித்தார்த் – கியாரா அத்வானியின் திருமணம் ஒத்திவைப்பு! நடந்தது என்ன?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 பிரபல பாலிவுட் பிரபலங்கான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியரா அத்வானி இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு வதந்தி முன்பு இருந்தே பரவி வருகிறது. ஆனால், இவர்கள் இருவரும் என்னதான், எங்கள் இருவருக்கும் திருமணம் இல்லை என்று மறுத்து வந்தாலும், இப்பொது இவர்கள் இருவரும் திருமணம் செய்யப்போவது உறுதியாகியு இருந்தது.

இந்நிலையில், சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் பிப்ரவரி 4 அன்று தங்கள் குடும்பத்துடன் ஜெய்சல்மேர் சென்றடைந்தனர். இந்த ஜோடி தங்களது திருமணத்திற்கு முந்தைய விழாக்களை பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் மெஹந்தி விழாவுடன் தொடங்கினர். முன்னதாக பிப்ரவரி 6-ம் தேதி திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது அவர்களது திருமணம் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவரும் பிப்ரவரி 7-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். மேலும், இன்று காலை நலங்கு வைக்கும் விழா காலை நடைபெற்று இருந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த ஜோடி தங்கள் திருமண நிகழ்ச்சிகளுக்காக தங்கள் குடும்பத்தினருடன் ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனைக்கு ஏற்கனவே வந்துவிட்டனர். 

இந்த பிரம்மாண்டமான திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அந்த வகையில், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் சாப்பாடு மெனு பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

ஒரு தகவலின் படி, அந்த திருமண மெனுவில்,எட்டு வகையான சுர்மா, ஐந்து வகையான பாத்தி மற்றும் மிகவும் சுவையான உள்ளூர் உணவுகளும் இடம்பெற்றுள்ளது. இதுபோக, ராஜஸ்தானி மற்றும் பஞ்சாபி குளிர்கால உணவுகளும் இருக்கும் என்றும், இத்தாலி, சீனா, கொரிய உணவுகள் என 20 க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகளும் உள்ளடங்கியுள்ளன.


Advertisement

Advertisement