• Jul 25 2025

போனி கபூரின் காரிலிருந்து கிலோ கணக்கில் பல லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் –வெளி யான பரபரப்பு தகவல்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து இருந்தார் ஸ்ரீதேவி. தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி படங்களில் கொடி கட்டி பறந்தவர். தனது கடைசி காலம் வரைஇளமையை மாறாமல் இருந்த ஸ்ரீதேவி இறப்பதற்கு இறுதி வரை தொடர்ந்து நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் பாலிவுட்டில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கும் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து இருக்கிறார். 

மேலும், அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த வலிமை படத்தையும் போனி கபூரே தயாரித்து இருந்தார்.

அதன் பின் வீட்டில் விசேஷம், நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை எல்லாம் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் வெளிவந்திருந்த துணிவு படத்தையும் போனி கபூர் தான் தயாரித்திருக்கிறார். 

இப்படி ஒரு நிலையில் போனி கபூரின் காரில் இருந்து கிலோ கணக்கில் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் இருந்து பூனே- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி பரிசோதனை செய்து இருக்கிறார்கள். அப்போது அந்த காரில் இருந்து 66 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

அதனுடைய மதிப்பு கிட்டத்தட்ட 33 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் வெள்ளி தட்டுகள், ஸ்பூன், கிண்ணங்கள், டம்ளர்கள் போன்ற பல பொருள்கள் இருந்தது. மேலும், இந்த காரை ஹரிசிங் என்ற டிரைவர் ஓட்டி வந்திருக்கிறார். இவருடன் சுல்தான் கான் என்பவரும் இருந்திருக்கிறார். இவர்கள் வைத்திருந்த வெள்ளி பொருள்களுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி இருக்கிறது.


Advertisement

Advertisement