• Jul 23 2025

சிம்புவுக்கு அதை பற்றி சரியாக திட்டமிடத் தெரியாது- படவாய்ப்பு இல்லாமல் போச்சா!..குழப்பத்தில் இருக்கும் முக்கிய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் வாரிசு நடிகாக அறிமுகமாகியவர் தான் சிம்பு. இவர் குழந்தைப் பருவத்திலிருந்தே பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இருப்பினும் இடையில் பிரபல நடிகைகளுடன் ஏற்பட்ட காதல் கிசுகிசு காரணமாக அவரின் கேரியரே போய் விட்டது என்று விமர்சனங்கள் வந்தன.

எனினும் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திடீரென தனது உடலை மெருகேற்றி “மாநாடு” திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் சிம்பு.அதன் பின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் சிம்பு, 20 வயது இளைஞனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஒரு கிராமத்து இளைஞனாக மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என பலரும் பாராட்டினர்.


“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு “பத்து தல” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் மார்ச் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் “பத்து தல” திரைப்படத்தை தொடர்ந்து இதுவரை எந்த திரைப்படத்திலும் சிம்பு ஒப்பந்தமாகவில்லை. “பத்து தல” திரைப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் இன்னும் தனது அடுத்த திரைப்படத்தை குறித்தான முடிவை எடுக்காமல் இருக்கிறார் சிம்பு.


இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அதில் “ரஜினிகாந்த, கமல்ஹாசன், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய அடுத்த படம் என்ன என்பது குறித்து மிகச் சரியாக திட்டமிடுகிறார்கள். ஆனால் இரண்டாம் நிலை நடிகர்களிடையே இந்த திட்டம் சரியாக இல்லை என்று நினைக்கிறேன்.


 அப்படி ஒரு நிலையில்தான் சிம்புவும் இருக்கிறார்” என கூறிய அவர் “சிம்பு பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த நேரம் அவரது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியிருக்கவேண்டாமா? ஏன் அவர் அதனை திட்டமிட முடியாமல் இருக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது” எனவும் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement