• Jul 23 2025

வெளியானது 'பத்து தல' படத்தின் நம்ம சத்தம் பாடல்.. வாவ் ரொம்ப நல்லா இருக்கே.. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் தான் சிம்பு. இவர் தற்போது 'பத்து தல, கொரோனா குமார்' போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா என்பவர் தான் இயக்குகிறார். 


அத்தோடு இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் தான் சிம்புள்ளார்.


சமீபத்தில் இந்த படத்தின் உடைய படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பத்து தல படத்தின் நாயகன் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ஆம் தேதி (இன்று) நள்ளிரவு 12.06 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது


நம்ம சத்தம் என்கிற அப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடி இருக்கிறார். அப்பாடலின் லிரிக்கல் வீடியோவில் சிம்பு நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது. ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ள இந்தப் பாடலானது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.


அதுமட்டுமல்லாமல் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்து மழையினைப் பொழிந்த வண்ணம் உள்ளனர்.

Advertisement

Advertisement