• Jul 25 2025

இலங்கையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளை திருமணம் செய்யப்போகும் சிம்பு- அவரது பெற்றோர் வெளியிட்ட தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நிறைய சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வரும் நடிகர் தான் சிம்பு.இவர் நடிப்பில் பத்து தல என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில்  கௌதம் கார்த்திக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இவ்வாறு படங்களில் பிஸியாக இருக்கும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாததால் இவருடைய பெற்றோர் பெண் பார்த்து வருகின்றனர்.சிம்புவின் சகோதரர் மற்றும் சகோதரிக்கு திருமணம் முடிந்த நிலையில் சிம்புவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க டி ராஜேந்தர் - உஷா தம்பதியும் முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக பல பெண்களை அவர்கள் பார்த்து வருவதாகவும் ஜாதகம் பொருத்தமாக இருக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் ஏற்கனவே சிம்புவை திருமணம் செய்ய இருக்கும் பெண் குறித்த வதந்திகள் வைரலான நிலையில் அந்த வதந்திகளுக்கு டி ராஜேந்தர் - உஷா தம்பதிகள் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை சிம்புவுக்கு பேசி முடித்திருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த தகவலும் வதந்தியா? டி ராஜேந்தர் - உஷா தம்பதியினார் இதற்கும் மறுப்பு தெரிவிப்பார்களா? அல்லது இது உண்மையான தகவலா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த ஆண்டுக்குள் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement