• Jul 24 2025

இரட்டை வேடத்தில் சம்பவம் செய்யப்போகும் சிம்பு.. வெளியானது STR 48 லேட்டஸ் அப்டேட்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ரூ. 100 கோடி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சிம்பு கெரியரில் அதிகபட்ச பட்ஜட்டில் உருவாகும் திரைப்படமும் இதுவே ஆகும்.

வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை திரையில் காண சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக செம அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, STR 48 திரைப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

ஒரு கெட்டப்பில் உடல் எடை கூடியும், மற்றொரு கெட்டப்பில் உடல் எடையை குறைத்தும் நடிக்க போகிறாராம். இதற்கான முயற்சியில் தான் தற்போது அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement