• Jul 25 2025

உலகநாயகன் தயாரிப்பில் சிம்பு? நாளை வெளியாக இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 48வது படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்று சமீப நாட்களாக பரவி வருகிறது. 

மேலும், குழந்தை பருவ நண்பர்களான சிம்பு மற்றும் அனிருத் முதன்முறையாக இந்தப் படத்தில் மூலம் இணைவார்கள் என்றும் தகவல் சொல்லபப்டுகிறது.

இந்நிலையில், இன்று கமலின் RKFI ஒரு அறிவிப்பை வெளியிட்டது அந்த அறிவிப்பில், “நாளை மாலை 6.30 மணிக்கு போர்க்களத்தில் சந்திப்போம் என்றும் “BLOOD and BATTLE” என்றும்  குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அதில் நடிகர் பெயரோ அல்லது இயக்குநர் பெயரோ குறிப்பிடவில்லை.இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரிய குழப்பத்தில் உள்ளனர். 

ஒரு வேலை, நாளை மாலை ‘STR 48’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என ஒரு பக்கம் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த கூட்டணியில் உருவாகும் படத்துக்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement