• Jul 25 2025

சிம்புவையா அவதூறாகப் பேசிறீங்க- ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்திய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சிம்பு மீது அவதூறு பரப்பும் விதமாக, விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனை கண்டித்து புதுச்சேரியில் எஸ்டிஆர் தலைமை ரசிகர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை இயக்குநரை் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.


இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இந்நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு கௌதம் மேனனும் பதிலடி கொடுத்து இருந்தார்.

 இந்நிலையில் இதனை கண்டித்து சிலம்பரசன் ரசிகர்கள் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுவை மாநில எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாநிலத் தலைவர் பாபு தலைமையில் ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement