• Jul 26 2025

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சிம்பு.. விஜய்க்காக செய்த விஷயம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.

2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது. இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் 'ரஞ்சிதமே' சில வாரங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ளது.


இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' இரு நாட்களுக்கு முன் வெளிவந்தது. சிலம்பரசன் குரலில் ஒலித்த இப்படம் தான் தற்போது படுவைரலாக பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, விஜய்யின் வாரிசு படத்தின் பாடலுக்காக சம்பளமே வாங்காமல் நடனம் ஆடியும் கொடுத்துள்ளாராம்.


Advertisement

Advertisement