• Jul 25 2025

40வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் சிம்பு.. தனியாக இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1984-ஆம் ஆண்டு 'உறவைக் காத்த கிளி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிம்பு. அதுமட்டுமல்லாது 'மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், மோனிஷா என் மோனாலிஷா' எனப் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர். அதன் பின் ஹீரோவாக களமிறங்கி பல ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்து இருக்கின்றார்.


சிம்புவிற்கு தற்போது 40 வயது ஆகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே உள்ளார். இருப்பினும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுடன் சிம்புவுக்கு காதல் ஏற்படுவதும், பின்னர் அது பிரேக்கப்பில் முடிவடைவதும் சகஜமான ஒன்றாகவே இருந்து வந்தது. இது சிம்பு ரசிகர்களை ரொம்பவே வருத்தமடைய செய்தது. 


இந்நிலையில் சமீப காலமாக, அதிகபட்சமாக சிம்பு புதிய படங்களுக்கு 20 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதாவது பிறந்தது முதல் தற்போது வரை சினிமாவிலேயே மூழ்கி உள்ள நடிகர் சிம்புவுக்கு தனியாகவே 119 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு சொகுசு கார், பங்களா என ஏகப்பட்ட சொத்துக்கள் சிம்புவின் பெயரிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement