• Jul 24 2025

தன்னுடைய அடுத்த படத்தில் இந்த நடிகை தான் நடிக்க வேண்டும் என அடம் பிடிக்கும் சிம்பு- ரகசியமாக டேட்டிங் சென்று வருகின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வரும் நடிகர் தான் சிம்பு. பத்து தல திரைப்படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்  நடிக்க கமிட்டாகியுள்ளார்.இதற்காக அவர் தற்போது தன்னுடைய லுக்கையே வேற லெவலில் மாற்றி வருகிறார்.

இப்படத்தில் நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் முதல் டாப் நடிகைகள் வரை பலரின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால் எதுவும் முடிவாகாத நிலையில் சிம்பு தற்போது ஒரு நடிகை சிபாரிசு செய்துள்ளாராம்.அந்த அளவுக்கு அவர் சிம்புவுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன ஒருவராக இருக்கிறாராம். அந்த நடிகை வேற யாரும் கிடையாதாம் நிதி அகர்வால் தானாம்.


இவர்கள் இருவரும் ஈஸ்வரன் படத்தில் இணைந்து நடித்தார்கள்.அந்த படம் வெளிவந்த சமயத்திலேயே இவர்கள் இருவரும் காதலிப்பாகவும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. அது மட்டுமல்லாமல் விரைவில் இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக கூட கூறப்பட்டது. 

ஆனால் சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் அது குறித்து வாய் திறக்காமல் இருந்தனர்.அதன் பிறகு சிம்புவும் நடிப்பில் கவனம் செலுத்தியதால் இந்த விஷயம் அப்படியே அடங்கிப் போனது. ஆனாலும் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து தங்கள் காதலை வளர்த்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது சிம்பு நடிக்க இருக்கும் படத்திலும் நிதி அகர்வாலை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று கூறுகிறாராம்.


ஆனால் தயாரிப்பு தரப்பு இது குறித்து இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை. ஆனாலும் நிதி அகர்வால் சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதாம். அந்த வகையில் படு சீக்ரெட்டாக இருந்த இந்த உறவு தற்போது அம்பலம் ஆகி இருக்கிறது. இதனால் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement