• Jul 25 2025

அதிரடி வசூல் வேட்டையில் சிம்புவின் 'பத்து தல'.. முதல் நாளில் மட்டுமே இத்தனை கோடியா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்திலும், சிம்பு நடிப்பிலும் நேற்றைய தினம் 'பத்து தல' திரைப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி இல்லை. இருப்பினும் முக்கிய கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் எனப் பலரும் நடித்துள்ளனர்.


அத்தோடு இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக இப்படமானது ரசிகர்களிடமிருந்து சிறந்த வரவேற்பையும், பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.


இந்நிலையில் பெரிய எதிர்ப்பார்க்கு மத்தியில் வெளியான இப்படமானது முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் பெரிய அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement