• Jul 24 2025

சிம்புவின் வெந்து தணிந்தது காடு 4வது நாளில் பெற்ற வசூல் விபரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் 15ம் தேதி வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் முதல் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்துள்ளது. சிம்புவுக்கு முதல் நான்கு நாட்களில் நல்ல ஓப்பனிங் கொடுத்த திரைப்படமாக வெந்து தணிந்தது காடு அமைந்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டாராக நடித்து அசத்தியிருப்பார்.ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லரும் பாடல்களும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.


அந்த எதிர்பார்ப்பை முதல் வாரத்தில் கிடைத்த தரமான ஓப்பனிங் உறுதி செய்துள்ளது.இப்படம் தற்போது 4 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் வரும் என்கின்றனர்.

ஆனாலும், பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் குறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement