• Jul 24 2025

முற்றிய சண்டை.. கோபத்தில் நடுக்கடலில் விழுந்த கூல் சுரேஷ்.. பதற்றத்தில் சிம்பு ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகராகவும் சிம்புவின் தீவிர ரசிகருமாக இருந்து வருபவர் கூல் சுரேஷ். இவரின் நடிப்பை ரசிப்பதை விட, ஒவ்வொரு படத்தின் முதல் காட்சிக்கு பின்பும் இவர் கூறும் விமர்சனத்தையே ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர்.


இந்நிலையில் சிம்புவின் பத்து தல படத்திற்காக ஹெலிகாப்டரில் வந்து இறங்கி விமர்சனம் கூறப்போவதாகவும் திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே கூல் சுரேஷ் அறிவித்துள்ளார். இதனையடுத்து நடிகர் கூல் சுரேஷ் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஆச்சர்யமான விடயம் நடந்துள்ளது.


அதாவது நடுக்கடலில் நடந்த இந்த பேட்டியில், சிம்புவை வைத்து தன்னுடைய விளம்பரத்திற்காக கூல் சுரேஷ் இப்படி செய்து வருகிறார் என ரசிகர்கள் பேசுகிறார்கள் என்று தொகுப்பாளர் அவரிடம் கேட்க, முதலில் பொறுமையாக பேசிக்கொண்டிருந்த கூல் சுரேஷ், திடீரென ஒரு கட்டத்தில் தொகுப்பாளருடன் சண்டை போட்டு கோபமடைந்து படகிலிருந்து நடுக்கடலில் குதித்துவிட்டார்.


இதனைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் பதற்றமடைந்தனர். இதன்பின் அங்கிருந்த நபர்களின் உதவியின் மூலம் கூல் சுரேஷை மீண்டும் படகிற்கு கொண்டு வந்தனர். சிம்புவிற்காக கூல் சுரேஷ் நடுக்கடலில் குதித்த சம்பவமானது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement