• Jul 25 2025

பத்து தல திரைப்படம் வெற்றி பெற சிம்புவின் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் தற்போது நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு கமல் ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் சிம்பு.

சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சென்றாயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்த நிலையில் இத்திரைப்படம் வெற்றிபெற புதுச்சேரி சிம்பு ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் படம் வெளியாகவுள்ள திரையரங்குகள் முன்பாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக 10 தல படம் வெற்றி பெற வாழ்த்தி புதுவை சிம்பு தலைமை மன்றத்தின் ஆதரவோடு காலாபட்டில் உள்ள தம் லிட்டில் சிம்பு ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக சினேகா முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி, முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்டது.


 இந்த நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் வேல்ராஜ், ரமேஷ், தண்டபாணி, கோவிந்து,என நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் படம் வெளியாகும் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட பொருட்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.



Advertisement

Advertisement