• Jul 25 2025

சிம்புவால் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை.. விஷயம் தெரிந்தும் கம்முன்னு இருக்கும் கமல்..! நடந்தது என்ன?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சை கூறியவர் தான் என்று நம் மனதில் ஆழமாக பதியும் அளவிற்கு பல விஷயங்களில் மாட்டி தவித்திருக்கிறார். அதற்கு காரணம் இவருடைய அசால்ட் தனமான கேரக்டர் தான். அதிலும் படப்பிடிப்பில் கூட ரொம்பவே மெத்தனமாக இருந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை அதிக அளவில் டென்ஷன் படுத்துவது இவருடைய வழக்கமான கேரக்டர்.

ஆனால் இதெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது என்றே சொல்லலாம். எப்பொழுது இவருக்கு மாநாடு என்ற வெற்றி படத்தின் மூலம் புகழ் கிடைத்ததோ அதன்பிறகு பழைய மாதிரி இல்லாமல் இவருடைய அடாவடித்தனத்தை மூட்டை கட்டி வைத்து நடித்து வருகிறார் என்று இவருடைய ரசிகர்கள் இவரை நினைத்து சந்தோஷப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது சிம்பு என்றாலே பிரச்சினை செய்பவர் தான் என்று நிரூபிக்கும் வகையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை இவரை சுற்றி வருகிறது.

அதாவது ஐசரி கணேசன் தயாரிப்பு நிறுவனத்துடன் மூன்று படங்களில் நடிப்பதற்காக கமிட் ஆகி அவரிடம் அட்வான்ஸ் தொகையாக பல கோடி வாங்கி இருக்கிறார். அந்த நிறுவனமும் தற்போது சிம்புவுக்கு சினிமா இண்டஸ்ட்ரியல் நல்ல பெயர் இருக்கிறது என்பதால் நம்பி இவர் கேட்கும் போது பணத்தை கொடுத்திருக்கிறார்.


ஆனால் அது நீண்ட காலம் ஆகியும் சிம்புவிடமிருந்து எந்த பதிலும் வராததால்

ஐசரி கணேசனின் நெருங்கிய நண்பராக இருக்கும் கமலிடம் நடந்த அனைத்தையும் சொல்லி புலம்பி இருக்கிறார். ஆனால் அவர் தற்போது சிம்புவை வைத்து பெரிய பிளானில் தயாரிப்பாளராக களம் இறங்கியதால் ஐசரி கணேசன் சொல்வதை காது கொடுத்துக் கூட வாங்காமல்  அமைதியாக இருக்கிறார்.

பிறகு இனிமேலும் இப்படியே சும்மா இருந்தா வேலைக்காகாது என்று தயாரிப்பு சங்கத்தில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். இதற்கு முன் சிம்பு இதே மாதிரி பிரச்சனை செய்து இருக்கிறார். தற்போது கமலின் நெருங்கிய நண்பரான ஐசரி கணேசனுக்கும் செய்திருக்கிறார். ஆனாலும் இதெல்லாம் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் கமல் அவருடைய முழு கவனமும் தயாரிப்பதில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement