• Jul 25 2025

கோமா நிலையில்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாடகி பாம்பே ஜெயஸ்ரீ.. உடல் நிலை குறித்து வெளியான தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ சமீபத்தில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 


அதாவது இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில் இவர் ஓட்டலில் தங்கி இருந்தபோது, திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுயநினைவை இழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.


இவ்வாறு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்த அப்டேட்டுகள் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.


அந்த வகையில், இன்று காலை பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டில், "மருத்துவ சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஜெயஸ்ரீ உடல்நலம் நன்கு தேறி வருகிறார். என்.ஹெச்.எஸ் ஊழியர்கள் சிறப்பாக பார்த்துக்கொள்கிறார்கள். இந்திய அரசும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளது.


இதன் மூலமாக இவர் உடல்நிலை சற்றுத் தேறியுள்ளமை தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement