• Jul 25 2025

விபத்தில் சிக்கிய பாடகி சின்மயி..? மதுபோதையில் நிகழ்ந்த சம்பவம்... குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகியவர் தான் சின்மயி. அந்தப் படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. இதனை அடுத்து இவர் தென்னிய மொழிகளில் பல பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.


மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போட்ட பதிவு ரசிகர்களை பெரும் குழப்பில்  ஆழ்த்தியது. அத்தோடு தொடர்ந்தும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த சின்மயி சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். 


பல சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதோடு இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ளார்.


இந்நிலையில் சின்மயி தற்போது எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது இவர் நேற்று மாலை தன் இரட்டைக் குழந்தைகளுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சின்மயியின் காரில் மோதியதாகவ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். 

அதுமட்டுமல்லாது "தற்போது தன் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், இந்த விபத்து தொடர்பாக தான் காவல்துறைக்கு அறிவிக்கவில்லை எனவும் " அவர் கூறியுள்ளார். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டாதீர்கள் எனவும் அப்பதிவின் மூலமாக அட்வைஸ் பண்ணியும் உள்ளார்.


Advertisement

Advertisement