• Jul 25 2025

என் உடல்.. என் உடை.. கெமண்ட் பண்ணியவர்களுக்கு காட்டமாக பதிலளித்த பாடகி பூஜா வைத்தியநாத்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணி பாடகி பூஜா வைத்தியநாத் தனது உடை குறித்த நெட்டிசன்கள் கமெண்ட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

என் உடல், என் உடை, என் வாழ்க்கை நீங்க யாரும் கருத்து சொல்ல தேவையில்லை என விளாசி உள்ளார்.தனக்கு பிடித்த உடைகளையும், தனக்கு செட்டாகும் உடைகளையுமே தான் அணிகிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய விளக்கமே கொடுத்துள்ளார்.


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக லைக்குகளையும் ஃபாலோயர்களையும் அல்ல ஹீரோயின்கள் முதல் சின்னத்திரை நடிகைகள், பாடகிகள், யூடியூபர்கள் என பலரும் தாராளமாக உடை அணிந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். பெண்களின் கவர்ச்சி உடை  புகைப்படங்களுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் படு மோசமான கமெண்ட்டுகளையும், விமர்சனங்களையும் வைப்பது வாடிக்கையாகி வருகிறது.


ஆனால், அதுவே சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் டிஎம் செய்து படு மோசமாக அவர்களை பாடி ஷேமிங் செய்வதும் அரங்கேறி வருகின்றது. இதனால் பெண் பிரபலங்கள் ஏகப்பட்ட டார்ச்சர்களையும் சோஷியல் மீடியா புல்லிங்கையும் சந்தித்து வருகின்றனர். சிலர் இது தொடர்பாக புகார்களையும் கொடுத்து உள்ளனர். இவ்வாறுஇருக்கையில், அப்படியொரு பிரச்சனையில் பாடகி பூஜா வைத்தியநாத் சிக்கியுள்ளார்.


லேசாக கவர்ச்சி தெரியும் படி உடைகளை உடுத்தி பாடல்களை பாட ஆரம்பித்துள்ளார் பிரபல பின்னணி பாடகி பூஜா வைத்தியநாத். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களை  பார்த்து சிலர் டிஎம் செய்து உங்களுக்கு இதுபோன்ற கவர்ச்சி உடைகள் எல்லாம் செட் ஆகலைன்னு கருத்து சொல்லி இருக்கிறார்களாம். அதனால், கடுப்பான பாடகி தற்போது அவர்களுக்கு புதிய போஸ்ட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடலின் தெலுங்கு வெர்ஷனை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி தற்போது தனது இன்ஸ்டாகிறாம் பக்கத்தில், என் உடல், என் உடை, என் வாழ்க்கை, நான் மோசமாக ஒன்றும் உடையணியவில்லை. எனக்கு பிடித்தமான உடைகளை தான் அணிகிறேன். தேவையில்லாமல் என்னிடம் உங்கள் கருத்துக்களை கூறுவதை நிறுத்துங்கள் என எச்சரித்துள்ளார்.


34 வயதாகும் பாடகி பூஜா வைத்தியநாத் ஜி.வி.பிரகாஷ் இசையில் தலைவா படத்தில் இடம்பெற்ற தலைவா பாடலை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷின் ராஞ்சனா படத்திலும் அதில் தமிழ் வெர்ஷனான அம்பிகாபதி படத்தில் இடம்பெற்ற உன்னால் உன்னால் பாடலையும் பாடி உள்ளார்.அத்தோடு  ஜில்லா, புலி, மெர்சல் உள்ளிட்ட படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

சமீபத்தில் நடிகை பாவனாவுக்கும் இதே போன்ற ஆடை சர்ச்சை எழுந்தது. கோல்டன் விசா வாங்க செல்லும் போது உள்ளாடை அணியாமல் அவர் வந்திருந்ததாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். ஸ்லிப் என்ற உடல் போன்ற ஆடையை அணிந்திருந்தேன் என விளக்கம் கொடுத்த பாவனா, தன்னை மீண்டும் இவர்கள் இருளில் தள்ளி விடுவார் போல என புலம்பினார்.


அத்தோடு மற்றவர்களை சந்தோஷப்படுத்த நான் ஒருபோதும் உடையணிந்ததே கிடையாது. எனக்கு பிடித்த உடைகளை மட்டுமே அணிகிறேன். இவ்வளவு கவர்ச்சி ஏன் என்றும் இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகல என்றும் கருத்து சொல்ல முதலில் நீங்கள் யார் என விளாசித் தள்ளி உள்ளார் பாடகி பூஜா வைத்தியநாத்.


Advertisement

Advertisement