• Jul 27 2025

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பாடகி ராஜலட்சுமி

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். தமிழில் இந்த நிகழ்ச்சியான இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இது தவிர பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி அண்மையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நடைபெற்று முடிவடைந்தது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5 வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள்.

மேலும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது அக்டோபர் 2ம் தேதி அட்டகாசமாக கோலாகல துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பம் ஆக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏகப்பட்ட குக்வித் கோமாளி பிரபலங்கள் பங்குபற்ற உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தற்பொழுது 'சின்ன மச்சான்' பாடலை பாடிய நாட்டுப்புற பின்னணி பாடகி ராஜலட்சுமி கலந்து கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட பாடகர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்த முறை ராஜலட்சுமி அதிரடியாக நுழைந்து அசத்தப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement