• Jul 25 2025

திரையுலகில் மற்றுமோர் அதிர்ச்சி.. பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியளவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் வாணி ஜெயராம். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 19 மொழிகளில் பல பாடல்கள் பாடி அசத்தியிருக்கின்றார்.


இவரின் காந்தக் குரலிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை எனலாம். பல பாடல்களை நமக்காக தந்தது மட்டுமல்லாமல் மூன்று முறை தேசிய விருதும், பத்ம பூஷன் விருதும் பெற்று சாதனை படைத்திருக்கின்றார். இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், 78 வயதாகும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் தற்போது மரணமடைந்துள்ளார். அதாவது சென்னை நுங்கம் பாக்கத்தில் வசித்து வரும் வாணி ஜெயராம் வீட்டில் வழுக்கி விழுந்து, தலையில் அடிப்பட்டு மரணமடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவருடைய மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement