• Jul 24 2025

பாடகி வாணி ஜெயராமுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான 'பத்ம பூஷன்' விருது அறிவிப்பு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் யார் யாருக்கென இந்திய அரசால்  அறிவிக்கப்பட்டது. அதில், பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருதும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது மற்றும் இந்தி திரைப்பட நடிகை ரவீணா டாண்டனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெய்ராம் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெறவுள்ளார். 

சமீபத்தில், வாணி ஜெய்ராம் பாடகியாக தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்தார், ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியதோடு, தேசிய திரைப்பட விருதுகளையும் மூன்று முறை வென்றிருக்கிறார்.



பாலிவுட்டில் சினிமாவில் பாடத்தொடங்கிய வாணி ஜெய்ராம், பல பாடல்களை பாடி அவர் தெலுங்கு மற்றும் தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துக்கொண்டார். இவர், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சக்ரவர்த்தி, இளையராஜா, சத்யம் உள்ளிட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.



கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். "எல்லா பாஷைகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே" - என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement