• Jul 24 2025

"சார் விஜய் சார் ஓட அரசியல்".. "அது வேண்டாங்க" - என்ன யோகி பாபு இப்படி சொல்லிட்டீங்க..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். 

அப்போது யோகி பாபு கூறுகையில் , இத பார்த்ததும் நம்மளும் ஒரு கிரௌண்ட கட்டலாம் என தோணிச்சு .இப்படி கிரௌண்ட அமைத்து நடராஜ்  போல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கலாம்.இது கடவுள் ஆரீர்வாதத்தால் நடக்கோணும்.எனக்கு எல்லா கிரிக்கெட் பிளேயர்ஸும் பிடிக்கும் அதில ரொம்ப வீரேந்திர சேவாக் அவரை பிடிக்கும்.என கூறியுள்ளார்.

 நடராஜ் தம்பிய ரொம்ப பிடிக்கும் கஸ்டப்பட்டு வந்திருக்கிறார் .அதனால அவரையும்  பிடிக்கும் .நான் அடுத்ததாக கிரிக்கெட் படம் தான் பண்ணுறேன் சீக்கிரமா அந்த திரைப்படம் வெளிவரும் பொம்மை நாயகி இயக்குநர் தான் இதனை இயக்குகிறார்.என கூறியுள்ளார்.

மேலும் விஜய் சார் ஓட அரசியல் பற்றி சொல்லுங்க என கேட்ட போது அவர் கூறியதாவது'' அதெல்லாம் வேணடாமே..பாஸ் ஆன் பிள்ளைகளுக்கு நல்ல விஷயம் பண்ணியிருக்காரு.படத்தை பாருங்க அவர் அரசியல்  சொல்லியிருக்கிறாரா? என்று புரியும் என கூறினார்.

Advertisement

Advertisement