• Jul 24 2025

“சிவகார்த்திகேயன் ஒரு குட்டி ரஜினி”... அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்த நடிகை சரிதா..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மெரினா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், இப்போது தமிழ்த் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சரிதா, சிவகார்த்திகேயன் பற்றி பேசியது பயங்கர வைரலாகி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயனை ஒரு குட்டி ரஜினி எனக் கூறி ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் லுக், அவர் பேசும் ஸ்டைல் போன்றவற்றை பார்க்கும்போது ரஜினிகாந்த் போலவே இருக்கிறார் எனக் கூறியுள்ளார். அதானால் சிவாவை குட்டி ரஜினி என்றே அழைப்பேன் எனவும் சரிதா பேசினார்.

சிவகார்த்திகேயனை குட்டி ரஜினி என நடிகை சரிதா கூறியது, ரசிகர்களால் பயங்கரமாக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் கடந்த சில மாதங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என பிள்ளையார் சுழி போட்டு வைத்தார் சரத்குமார். இதனால் ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் கடும் மோதல் ஏற்பட்டது.

இப்போது சிவகார்த்திகேயனை ஒரு குட்டி ரஜினி என சரிதா கூறியது மீண்டும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை தொடங்கி வைத்துள்ளது. சிம்பு, தனுஷ் ஆகியோரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மேனரிசத்துடன் நடித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயனும் இந்த போட்டியில் இணைந்துள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது. 


Advertisement

Advertisement