• Jul 24 2025

ரசிகர்களுடன் சேர்ந்து 'மாவீரன்' படம் பார்த்த சிவகார்த்திகேயன்..எங்கு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது மாவீரன் படம். படம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சிறப்பான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆனாலும் ஒரே மாதிரியான காட்சிகள் மற்றும் பாடி ஷேமிங் காமெடிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு சில ரசிகர்கள் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

இதுபோன்ற படத்தை மடோன் அஸ்வினிடம் எதிர்பார்க்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளதாகவும் பேன்டசி படமாக சிறப்பாக அமைந்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. குறிப்பாக படத்தின் நாயகன் மற்றும் நாயகி சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் இணைந்து பாடியிருந்த வண்ணாரப்பேட்டையில பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக இணைந்துள்ளார். படத்தின் வெற்றிக்கு அவரது கெட்டப் மற்றும் உடல்மொழி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் நடிகை சரிதா நடித்துள்ளார். இவர்களது கேரக்டர்கள் குறித்தும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்றைய தினம் படம் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் இணைந்து முதல் நாள் முதல் ஷோவை வெற்றி திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். முன்னதாக அவருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை கொடுத்திருந்தனர். 

Advertisement

Advertisement