• Jul 24 2025

ரசிகர்களுக்கு கிடைத்த சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசு - மாவீரன் படத்தின் பெஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தன் பயணத்தை துவங்கிய சிவகார்த்திகேயன் இன்று வெள்ளித்திரையை கலக்கி வருகின்றார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை ஈர்த்த சிவகார்த்திகேயன் பாண்டிராஜின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.இந்நிலையில் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார் .இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

இந்த நிலையில் இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மாவீரன் படத்தின் பெஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement