• Jul 24 2025

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திலிருந்து வெளியாகிய அடுத்த சரவெடியான அப்டேட்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பிரின்ஸ் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஜெஸ்ஸிகா நாளை மாலை  5:30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தை இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கியிருந்தார்.  இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.


இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பானது  தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆரம்பமாகி பாண்டிச்சேரியில் நடைபெற்றது.படப்பிடிப்பு நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


இப்படமானது  தீபாவளிக்கு  ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஜெஸ்ஸிகா நாளை மாலை  5:30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளதுஇ என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement