• Jul 25 2025

சிவனேன்னு நின்ன மனுஷனை இப்படிப் பண்ணிட்டீங்களே... கேலிக்குள்ளான 'ஈரமான ரோஜாவே-2' சீரியல்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்று ரசிகர்களின் கடுமையாக கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அதில் அருணாச்சலம் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வந்திருந்தனர். அந்த சமயத்தில் காவியா என்ற பெயரில் உள்ள வேறோர் இளம்பெண் குளத்தில் விழுகிறார். 

இதனைப் பார்த்த பார்த்தியின் மாமா, நம்ம காவ்யா தான் குளத்தில் விழுந்துட்டா என்று கூறிக் கத்துகின்றார். இதனையடுத்து பார்த்தியும் ஓடி வந்து காப்பாற்றினால் அது பார்த்தியின், மனைவி காவியா இல்லை. இவ்வாறாக பார்த்தி காப்பாற்ற ஓடி வந்த சமயத்தில் ப்ளூ சட்டை நபர் ஒருவரை குளத்திற்குள் தள்ளி விட்ட காட்சி ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகின்றது.


அதாவது "பார்த்தியை 10 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 3 ரூபாய்க்கு நடிக்கிறியே, நான் சிவனேன்னு தானே நின்னுட்டு இருந்தேன்' எதுக்குய்யா என்னை தள்ளி விட்டாய்" என ப்ளூ சட்டை நபர் புலம்புவதாகவும் கூறிக் கிண்டலடித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement