• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆறு போட்டியாளர்கள்- பரபரப்பான் முதலாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நேற்றைய தினம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதனால் இதில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் முதலாம் நாளாகிய இன்றைய நாளில் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வீட்டின் முதல் வாரத்தலைவராக இருக்கும் விஜய் வர்மாவைக் கவராத போட்டியாளர்கள் என பிக்பாஸ் 6 போட்டியாளர்களின் பெயரை அறிவிக்கின்றார்.


அதில் ரவீனா,வினுஷா,நிக்சன்,ஐசு,அனன்யா,பவா செல்லத்துறை ஆகியோர் இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்போது பிக்பாஸ் இனிமேல் அடுத்த வீட்டுக்கு போகும் மட்டும் உங்களுடன் பேசமாட்டேன் என்று சொல்கின்றார்.அத்தோடு யாரும் இந்த வீட்டை விட்டு போகக் கூடாது என்றும் சொல்கின்றார்.

இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement