• Jul 24 2025

சர்ச்சை நடிகருடன் நடிகை வனிதா விஜயகுமார் நடித்த mallipelli படத்தின் ஸ்னேக் பீக் ரிலீஸ்- அசத்தலாக நடிச்சிருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா, ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார். நடிகர் விஜய்க்கு கூட ஜோடியாக நடித்துள்ள வனிதாவை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா, அந்த சீசனில் கொளுத்திப்போட்டு சண்டையை உருவாக்குவதில் கில்லாடியாக இருந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வனிதா. இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பீட்டர்பால் குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரை துரத்திவிட்டார் வனிதா.

அதன்பின் எந்தவித சண்டை சச்சரவுகளிலும் சிக்காமல் இருந்து வந்த வனிதா, நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 பைனலில் விக்ரமன் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவர் எதிர்பார்த்தபடியே விக்ரமன் ஜெயிக்காததால், அந்த சீசன் வின்னர் அசீமை தனது வீட்டுக்கு அழைத்து விருந்தெல்லாம் கொடுத்து அமர்க்களப்படுத்தி இருந்தார் .

இப்படி சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வரும் வனிதா, படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.இப்படியான நிலையில் இவர் தற்பொழுது mallipelli என்னும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இது குறித்த ஸ்னேக் பீக் வெளியாகியுள்ளதைக் காணலாம். 


Advertisement

Advertisement