• Jul 25 2025

பசுவுக்கு உணவளித்து மாட்டு பொங்கல் கொண்டாடிய சினேகா-பிரசன்னா! வைரல் போட்டோஸ்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் சினேகா.கமல், அஜித், விஜய், தனுஷ், சிலம்பரசன்  என  முன்னணிநடிகர்களின் படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.



தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான இவர்களுக்கு  தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு  பெண் குழந்தையும் உள்ளனர்.

இறுதியாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டாஸ் படத்தில் சினேகா நடித்திருந்தார். தற்போது சினேகா, மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரசன்னாவும் தற்போது துப்பறிவாளன் -2 படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பிரசன்னா, சினேகா தனது குழந்தைகளுடன் பசு மாட்டிற்கு உணவளித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த பமிலி போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement