• Jul 25 2025

சில இரவுகளில் என் விரல்கள் என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன- பிரபல நடிகை போட்ட சர்ச்சைப் பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


’தொண்டி முதலும் திருசாட்சியும்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிமிஷா சஜயன். மேலும் அவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றும் விருதுகளையும் வென்று உள்ளார் எ. ’கிரேட் இந்தியன் கிச்சன்’ உள்பட அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. மேலும் இவர் தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக நிமிஷா சஜயனின் பக்கத்திற்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் . இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.


அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்’ என்று கவிதை வடிவில் பதிவு செய்துள்ளார்.


இந்த வரிகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் உண்மையில் அவர்தான் பதிவு செய்தாரா? அல்லது யாராவது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து பதிவு செய்திருக்கிறார்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு நிமிஷா என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement